நாம் !!

 




அறியாப் பருவத்தில் உன்னை பார்த்தபோதே

அழியா நட்பு பூத்தது!

தினமும் பார்த்தோம், பேசினோம்

நினைத்தாலே இனிக்கும் நாட்களாய் அதை மாற்றினோம்.

அடைமழைக்குப் பிறகு மீண்டும் துளிர்விட்ட இலைகள் போல்

அன்புச் சண்டைக்குப் பிறகு வலுப்பெற்றது நம் நட்பு! 

துன்பம் எதுவென்றாலும் நாம் இணைந்த பிறகு

சிரிக்க மறந்தது இல்லை! 

அனைத்தையும் விட்டுக்கொடுப்போம்;

ஆனால் நம் அன்பை விட்டுக்கொடுப்பதே இல்லை

அன்னையைப் போல் பாசம் காண்பித்தாய்,

தந்தையைப் போல் அறிவை புகட்டினாய்,

சகோதரியைப் போல் செல்ல சண்டையிட்டாய்,

ஆனால் என்றும் அன்பு தோழியாய்(தோழனாய்), என் மனதில் நின்றாய்.

துக்கம் வந்த போது அதை தூக்கிப்போட செய்தது; உன் சிரிப்பு!

தவறிழைத்தபோது அதைத் துள்ளியமாய் புரியவைத்தது; உன் மௌனம்!

அதை மீண்டும் சரிசெய்ய வாய்ப்புள்ளது என காட்டியது; உன் வார்த்தை!

வெற்றிபெற்ற போது பாராட்ட மறந்ததில்லை நீ! 

இன்னலில் இருந்த போது தாலாட்டவும் மறந்ததில்லை நீ!

ஒரு நல்ல நட்பால் இரு மனங்கள் இணையும்,

ஆனால் நம் நட்பால் இரு குடும்பங்கள் இணைந்தது.

நான் வென்றபோது, "நீ என் தோழி(தோழன்)" என பெருமைபட்டாய்;

நான் தோற்றபோது, "நான் உன் தோழி(தோழன்)" என கரம்கோர்த்தாய்.

என்றும் பிரியாவொன்று உள்ளது! 

அதில் ஒரு பாதி இதை எழுதியது(பகிர்கிறது)

மற்றொரு பாதி இதை படிக்கிறது. 

உனக்காக நான் இருப்பேன்

உன்னவளா(னா)ய் என்றும் நிற்பேன்!

வெற்றிகள் பல உண்டு

அதை சேர்ந்தே நாம் கைப்பற்றுவோம்! 

இரவின்றி பகலில்லை

என்றும் நம் நட்பின்றி நான் இல்லை.

                                          -சு.காவிய பிரியா


Post a Comment

Previous Post Next Post

Contact Form