அமைதியான இரவு,
ஆழமான நினைவு !
நிம்மதியான நிசப்தத்தை, நிலைபிரழ செய்தது அந்த அழகிய நினைவுகள்!
கண்கள் நினைவு ஆற்றில் சிறு துளிகளை வடிக்க,
மெத்தையில் அத்துளிகள் மெதுவாய் பதமாய் படிய,
அந்நினைவுகளைக் காட்சியாய் என் மனம் காட்ட
மீண்டும் அந்த நாட்கள் வராதோ என
என் இதயம் இணக்கமாய் எதிர்பார்க்கிறதே!
நினைக்க நினைக்க நினைவு கனவாய் வந்ததே
கனவாய் மட்டும் வருகின்றதே என்று ஏக்கம் அதனால்
கலைந்து போனதே அந்நாளின் தூக்கம்!
நெடுநேரத்திற்குப் பிறகு நினைவின் நினைப்பில் நிசப்தத்தை அடைந்தேனே;
மெல்ல மெல்லக் கதிரொளி கன்னத்தில் பட, விடியல் எட்டிப் பார்க்க;
விம்புகின்ற சிந்தனை சிறைபிடிக்கப்பட்டதே!!
சிறு புன்னகை கச்சிதமாய் முகத்தில் சித்தரிக்கப்பட்டது!
மற்றொரு நாள்;
மீண்டும் தொடங்கியதே அந்நாளின் ஓட்டம்:
சென்றுவா நினைவே,
இரவில் சந்திப்போம்!
இணைந்து இனிமையான நினைவுகளைச் சிந்திப்போம்!!!
-காவிய பிரியா